இன்றைய சூழலில் நாம் உடல் நலம் சார்ந்த விஷயத்தில் அதிக கவனத்தில் கொள்ள வேண்டியது உடல் எடையை பராமரிப்பது. இந்த உடல் எடையைப் பராமரிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கும் பயன்கள் என்ன என்பதை சற்று தெளிவாக பார்க்கலாம். நமது உடலில் ஏற்படும் பல விதமான உடல் நலக் குறைபாடுகளுக்கு முக்கியமான காரணம் நாம் சரியாக உடல் எடையை பராமரிக்காமல் இருப்பதே ஆகும். இதனால் பலவிதமான உடல் சார்ந்த பிரச்சினைகள் மட்டுமல்லாது மனம் சார்ந்த பிரச்சினைகளும் ஏற்படுகின்றது. சரி இந்த உடல் எடையை எப்படி பராமரிப்பது அதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி சற்று ஆராய்ந்து பார்த்தால் அதில் ஒன்றுதான் உடல் எடை குறியீட்டு (Body Mass Index - BMI) ஆகும்.
உடல் எடை குறைய இதைப்பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு முன்பு உடல் எடை அதிகரிப்பது அல்லது உடல் எடை குறைவாக இருப்பதினால் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகளைப் பற்றி பார்க்கலாம். இன்றைய சூழலில் ஒரு ஆய்வின்படி 60 சதவீதத்திற்கு மேலான மக்கள் உடல் எடை அதிகரிப்பால் இன்னல்களை சந்திக்கின்றனர் என்றும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் உடல் எடை குறைவால் அவதிப்படுகிறார்கள் என்றும் இந்த ஆய்வு விளக்குகிறது.
உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் சில முக்கிய பிரச்சனைகள்: பொதுவாக ஒரு மனிதனுக்கு சராசரியாக இருக்க வேண்டிய உடல் எடையை விட அதிகமாக இருப்பது உடல் எடை அதிகரித்தல் அல்லது குண்டாதல் எனப்படும். இவ்வாறு குண்டாக இருப்பதினால் உடம்பில் அதிகப்படியான கொழுப்புக்கள் தேவையற்ற நிலையில் சேர்ந்துள்ளது என அறியலாம். இதுபோன்ற பெரும்பாலும் பல உடல்ரீதியான பிரச்சினைகள் இருப்பது வழக்கமான ஒன்று. அதிலும் நீரிழிவு நோய், இதய நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற பலவிதமான நோய்கள் இருப்பது பொதுவான ஒன்று.
உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுபவர்கள் அதிகமாக உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ளுதல் வேண்டும் அதாவது தேவை ஏற்படும் போது மட்டும் உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை/மாலை வேளைகளில் அதிகமாக நடத்தல் மற்றும் சைக்கிள் போன்றவற்றை ஓட்டுதல் யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுதல் எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை உண்ணுதல் போன்ற பல நடைமுறைகள் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு உதவலாம்.
உடல் எடை குறைபாட்டால் ஏற்படும் முக்கிய பிரச்சினைகள்: உடல் எடை குறைபாடு அதாவது ஒல்லியாக இருப்பது பல நோய்களை ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். அதாவது ஒரு நோய்த்தொற்று உங்களை எளிதில் தொற்றிக்கொள்ளும். உடல் எடை குறைவாக இருப்பதனால் பொதுவான பிரச்சினைகள் என்னவென்றால் காசநோய், எலும்புருக்கி நோய், ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய் போன்ற பல பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்படக்கூடும்.
உடல் எடை குறைவாக இருப்பவர்கள் பெரும்பாலும் நல்ல சத்தான உணவுகளை உண்பதும், சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் நன்று. மேலும் உடல் எடை குறைவாக இருப்பவர்கள் தனது உணவு முறைகளில் சில மாற்றங்களை மேற்கொள்ளுதல் மிக அவசியமான ஒன்று. அதாவது பச்சை காய்கறிகள் கீரை வகைகள் பழங்கள் ஆகியவற்றை தொடர்ந்து உண்ணுதல், மற்றும் புரதம் அதிகமுள்ள இறைச்சிகள் பால் முட்டை இவற்றை உண்ணுவது உடல் எடை குறைபாட்டை போக்குவதற்கான வழிமுறைகளாகும்.
சரி நாம் இப்போது உடல் எடை குறியீட்டை கணக்கிடுவது என்பது பற்றிய விவரங்களைக் காணலாம். பொதுவாக உடல் எடை குறியீடு ஒருவருடைய உடல் எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கொண்டு கணக்கிடப்படுகிறது. எளிதாக சொல்ல வேண்டுமானால் உங்களுடைய உடல் எடையை உயரத்தைக் கொண்டு வகுத்தால் அதில் வரும் சராசரியை BMI அதாவது உடல் எடை குறியீடு ஆகும். எளிதான உடல் எடை குறியீட்டை காணல் அதற்கான கணக்கீடும் முறை இதுவே.
BMI = Weight (kg) / Height (m)²
உதாரணத்திற்கு ஒரு மனிதனை கற்பனையாக கொண்டு அவரின் உடல் எடை மற்றும் உயரம் அவற்றைக்கொண்டு அவருடைய உடல் எடை குறியீட்டை எவ்வாறு காண்பது பற்றிய சிறிய எடுத்துக்காட்டு.
அதாவது இவருடைய உடல் எடை குறியீடு(BMI) = 24.22 ஆகும்.
இந்த உடல் எடை குறியீட்டை கொண்டு உங்கள் உடல் எடை எந்த தொகுப்பில் உள்ளது என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உடல் எடை குறியீட்டு அட்டவணை உதவியாக இருக்கும்.
இந்த பதிவின் மூலம் நீங்கள் உடல் எடை குறியீடு மற்றும் உடல் எடை பிரச்சினை ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த தகவல்கள் உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் இதைப் பற்றிய ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருப்பின் அதனை கீழே உள்ள கமெண்டில் தெரிவிக்கலாம்.