தற்போதைய நம் ஆடைக் கலாச்சாரம் பெருமளவில் மாறிவிட்டது, அதாவது நாம் அணியும் ஆடைகள் நமது வேலை சார்ந்ததாகவோ அல்லது சுற்றுச்சூழல் சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால் அது தங்களின் அழகை வெளிப்படுத்தவும் ஆடை மிக முக்கியமாக உள்ளது. நம்மில் பலர் பலவித ஆடைகளை அணிகிறோம் அதில் பெரும்பாலானவர்களின் தேர்வு ஜீன்ஸ் ஆடையாக உள்ளது. ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் இந்த ஜீன் ஆடையை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணம் இது தங்களது உடல் வாகை அழகாக பிரதிபலிக்கின்றது என்பதே ஆகும். மேலும் ஜீன்ஸ் ஆடைகளில் மட்டுமே பல வகையான மாடல்களை உருவாக்கி அணிந்து கொள்ள முடியும் என்பது மற்றொரு காரணம்.
பல காரணங்களால் இந்த ஜீன்ஸ் ஆடைகள் அணிந்து வந்தாலும் அதில் சில பாதிப்புகள் உள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்று. ஜீன்ஸ் ஆடை அணிவதால் ஏற்படக்கூடிய சில முக்கியமான பிரச்சனைகளை பற்றி பேசுவது அவசியமான ஒன்று .ஏனென்றால் இது உடல் ரீதியான சில பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாது வேறு சில பிரச்சனைகளும் இதில் அடங்கியுள்ளன. அந்தப் பிரச்சினைகள் என்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1.ஜீன்ஸ் ஆடை ஏற்படுத்தும் சிறுநீரக பாதிப்பு: இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளை அணிவதால் சிறுநீரகப் பாதையில் நோய் தொற்று ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 2,000 ஆண்களைக் கொண்டு இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் 50 சதவீத ஆண்கள் தங்களுக்கு இடுப்பில் அதிக அழுத்தத்துடன் ஏதோ பிரச்சனை இருக்கின்றது என உணர்ந்தனர். காலப்போக்கில் சிறுநீரகப்பை செயல்பாட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்தார்கள். இந்த ஆய்விற்கு பின் 25 சதவீத ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்படுவதை கண்டறிந்தார்கள். மேலும் 20 சதவிகித ஆண்களுக்கு விந்தணுக்கள் பிரச்சினை ஏற்படுகின்றன என்பதையும் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
ஜீன்ஸ் ஆடைகள் மிகவும் தடிமணாகவும் இறுக்கமாகவும் இருப்பதன் காரணமாக காற்றோட்டம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது அதுமட்டுமில்லாமல் தோலில் சில அலர்ஜியும் ஏற்படுகிறது. இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகளை அணிவது அழகாக இருக்கின்றது என்ற ஒரு காரணத்திற்காக நாம் நமது உடல் ஆரோக்கியத்தை தியாகம் செய்வது அவ்வளவு நல்லது அல்ல.
2.இறுக்கமான ஜீன்ஸ் ஆடைகள் நமது இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் அதிகமாக வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இங்கே காற்றோட்டம் குறைவு என்பதாலும் இரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது என்பதாலும் இது நிகழ்கிறது. இதனால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தித் திறன் குறைகிறது.தொடர்ந்து இது போன்ற இறுக்கமான ஆடைகளை அணிவதால் இடுப்புப் பகுதிகளில் அதிக வெப்பம் காரணமாக தோல் அலர்ஜி மற்றும் பூஞ்சை நோய்கள் வரும் அபாயங்களும் அதிகமாக உள்ளன.
பொதுவாக இது போன்ற இறுக்கமான ஆடைகள் அணிவதனால் டெஸ்டிகுலார் கேன்சர்(Testicular cancer) எனப்படும் ஒரு வகை கேன்சர் நோய் ஆண்களுக்கு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஒருவர் இறுக்கமான மற்றும் கடினமான ஜீன்ஸ் ஆடைகளை அணிந்து கொண்டு நடக்கும் போது அல்லது ஓடும் போது அல்லது ஓர் இடத்தில் இருந்து வேலை செய்யும் போது நமது தசைகள் அசைவின்றி இருக்கப்படுவதால் தசைச் சிதைவு ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
3.இதுபோன்ற ஜீன்ஸ் ஆடைகளை அணிபவர்கள் கண்டிப்பாக பெல்ட் அணிவது வழக்கமான ஒன்று. பெல்ட் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டப்படுகிறது இதனால் அடிவயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட முடியாமல் போய்விடுகிறது. இதனால் உடல் அலர்ஜி அஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மேலும் இறுக்கமான ஆடைகளை காரணமாக அதிகப்படியான வியர்வை அங்கேயே தங்கி விடுகின்றன, இதனால் தோல் அலர்ஜி ஏற்படும். ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் கூட இந்த இறுக்கமான ஜீன்ஸ் உடைகளை அணிகின்றனர். இவ்வாறு இந்த ஆடைகளை இறுக்கமாக அணிவதன் காரணமாக உடல் இயல்பான மாற்றத்தில் இருந்து மாறுபட்டு சில செயற்கையான விதிமுறைகளுக்கு உட்பட்டு பல நோய்களுக்கு வழிவகுக்கின்றது .
4.இந்த ஜீன்ஸ் ஆடைகள் இன்று அதிகப்படியான வண்ணங்களில் கிடைக்கிறது இதில் ஏற்றப்படும் வர்ணங்கள் அதிக ஆபத்து மிக்க கெமிக்கல்களை கொண்டு உருவாக்கப் படுகின்றன. இந்த ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட ஜீன்ஸ் ஆடைகளை தொடர்ந்து அணிவதனால் கேன்சர் போன்ற ஆபத்தான நோய்கள் வரலாம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
5.இந்த இறுக்கமான ஆபத்தான ரசாயன வண்ணங்கள் பூசப்பட்ட ஜீன்ஸ் ஆடைகளைக்கு பதிலாக நாம் மெல்லிய பருத்தி உடைகளை அணிவது நல்லது. பொதுவாக ஆடைகள் உடலை அதிகம் இறுக்கிப் பிடிக்கும் அளவுக்கு இல்லாமல் இருப்பது மற்றும் அதிக அழுத்தம் கொண்ட தாகவும் இல்லாது இருப்பது வரவேற்கத்தக்கது. கண்டிப்பாக எப்போதுமே மெல்லிய பருத்தி மற்றும் கதர் ஆடைகளை அணிவது சிறந்த ஒன்று. அதேபோல் உள்ளாடைகள் பருத்தி ஆடைகள் ஆக இருப்பது முக்கியமான ஒன்றாகும். பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சி கொள்ளும் தன்மை கொண்டதால் இது தோல் அலர்ஜியில் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது.
நமது ஆடைகள் எப்போதும் நமது மானத்தையும் அழகையும் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டுமே தவிர அது ஒரு போதும் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது. அவ்வாறான ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டு உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பார்த்து கொள்ள வேண்டும். அதுவே ஆடைக் கலாச்சாரத்தின் நாகரிக மாற்றம் என்பதற்கான பொருத்தமான ஒன்று.
இந்தக் கட்டுரை இறுக்கமான ஜீன்ஸ் உடை அணிவதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நோக்கத்தோடு மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக அமைந்து இருந்தால் இதனை கீழே உள்ள சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பினும் அதனை கமெண்டில் தெரிவிக்கலாம்.